RSS

பூ ஒன்று புயலாகிறது

27 Feb

இத்தனை ஸ்பீடான இந்தி புரியவில்லை. ஆனால் ஆயிரம் ஸ்ம்ருதிகள் ஒன்றாக வந்தாலும் நிற்க முடியாது என்பது மொழி தெரியாமலே விளங்குகிறது.
ஃபேஸ்புக்கில் ஒடியனும் தி இந்துவில் ஆதி வள்ளியப்பனும் அறிமுகம் செய்ததில் இருந்து…
சக மாணவ, மாணவிகளால் ‘காம்ரேட்’ என்று அழைக்கப்படுகிறார் ஷெஹ்லா ரஷித் ஷோரா.
ஷெஹ்லா என்றால் கஷ்மீரி மொழியில் மலர் என்று அர்த்தம். ஆனால், பேச்சில் தீப்பொறி பறக்கிறது.
“ஜே.என்.யு.வில் கிடைத்த அனுபவங்களும் அரசியல் பயிற்சியும் அற்புதமானது. இந்த நாட்டில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய கடைக்கோடி மனிதனுக்காகவும் நான் குரல் கொடுக்க வேண்டும் என்பதை அதுதான் கற்றுக்கொடுத்தது” என்கிறார் ஷெஹ்லா.
தேச விரோத கோஷங்கள், காஷ்மீர் விடுதலை கோஷங்களே ஜே.என்.யு மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரின் கைதுக்கு காரணமாக கூறப்பட்டது. அந்த குற்றச்சாட்டு எவ்வளவு போலியானது என்பதை போட்டு உடைத்து, மத்திய அரசையும் ஜே.என்.யு. நிர்வாகத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து போட்டு விமர்சிக்கிறார் ஷெஹ்லா.
கன்னையா குமாருக்கு அடுத்த நிலையில் ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் துணை தலைவர் அவர்தான்.
ஜே.என்.யு மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்ட முதல் காஷ்மீரி ஷெஹ்லா. ‘அகில இந்திய மாணவர் சங்கம் – விடுதலை’ (AISA) எனப்படும் இடதுசாரி மாணவர் அமைப்பின் சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, அந்த தேர்தலிலேயே அதிக வாக்குகளை (1387) பெற்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை சேர்ந்தவர் ஷெஹ்லா. அவருடைய அம்மா நர்ஸ். நடுத்தர குடும்பம். ஸ்ரீநகர் என்.ஐ.டி., பெங்களூர் ஐ.ஐ.எம் ஆகியவற்றில் படித்தார். கார்ப்பரேட் உலகில் நுழைந்தார். கற்பனைகள் விரைவில் உடைந்து நொறுங்க, சமூக ஆர்வலராக மாறினார். காஷ்மீரில் அரசியல் செயல்பாடுகளுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கவே ஜே.என்.யு.வில் சட்டம் மற்றும் அரசாட்சி பிரிவில் எம்.ஃபில் படிக்க சேர்ந்தார். பெண் உரிமைகள், சுதந்திரமான பேச்சுரிமை, மனித உரிமை சார்ந்து தொடர்ந்து செயல்பட்டுவந்துள்ளார்.
“எங்கள் போராட்டம் மோடி அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதிதான். அரசை விமர்சித்தால் தேச விரோதம் என்று சிறையில் தள்ளுகிறது அரசு. இந்த வேட்டையாடல் முடியும்வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்கிறார் ஷெஹ்லா.
26 வயதான ஷெஹ்லா பேசும்போதெல்லாம் மாணவர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கிறது.
ஒடியன் பதிவில் பேச்சை கேட்டு பாருங்கள். மொழி புரியாவிட்டாலும்.

1622504_822563767771201_2089649643210206418_oKathir Vel

இது ஷெஹ்லாவின் ஃபேஸ்புக் பேஜ்:
(https://www.facebook.com/ShoraSR?fref=ts&hc_location=ufi)

 
Leave a comment

Posted by on February 27, 2016 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s